ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனம், தனது நிலையான வைப்பு நிதித் (FD) திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. இதன்படி, 36 முதல் 60 மாதங்கள் வரையிலான வைப்புகளுக்கு ஆண்டுக்கு 7.85% வட்டி வழங்கப்படுகிறது.
12 மாத வைப்புகளுக்கான வட்டி 6.85%-லிருந்து 7% ஆகவும், 15 மாத டிஜிட்டல் வைப்புகளுக்கான வட்டி 7.1%-லிருந்து 7.5% ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 24–35 மாத வைப்புகளுக்கும் 7.5% வட்டி வழங்கப்படுகிறது.60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.50%, பெண்களுக்கு 0.05% வட்டி வழங்கப்படும். முதிர்வடைந்த வைப்புகளைப் (Matured Deposits) புதுப்பிப்பவர்களுக்கு கூடுதலாக 0.15% வட்டி கிடைக்கும்.
முதலீட்டாளர்கள் வைப்புத் திட்ட விதிமுறைகள், முன்கூட்டிய பணமெடுப்பு நிபந்தனைகள் மற்றும் வரி விளைவுகளைப் பரிசீலித்து முதலீடு செய்ய வேண்டும்.